வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. வட பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வட பகுதிக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை (MPD) பெற்றே செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தகவலை அறியாது சென்ற பல வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளமையால் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந் நடைமுறை ஜனாதிபதியின் வட பகுதி விஜயம் முடிவடைந்ததன் பின்னர் வழமைக்கு திரும்பும் எனவும் தெரியவருகின்றது.
