பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், பெண்கள் ஜீன்ஸ் அணிவது, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என்று சொன்ன கருத்து நாடெங்கிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அவரது கருத்துக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரத்தில், தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த ஜேசுதாஸ், அவ்விழாவில் பேசினார். அப்போதுதான், “பெண்கள் ஜீன்ஸ் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு தொல்லை ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்தே ஆடை அணிய வேண்டும். அதுதான் இந்திய கலாச்சாரத்தின் அழகு. அதற்கு மாறாக பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. எளிமையும், அடக்கமுமே பெண்களின் மதிப்பு” என்று கருத்து தெரிவித்தார்.
ஜேசுதாசின் இந்த கருத்துதான் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஜேசுதாசின் இந்த கருத்துக்கு மகிலா காங்கிரஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
“இது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. இது பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான கருத்தாகவே பார்க்க முடிகிறது. ஜேசுதாஸ் மிகப் பெரிய பாடகர். இசை உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை நினைத்து இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்கிறார்கள். அத்தகைய மாபெரும் இசை மேதை பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது”, என்று மகிலா காங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “கே.ஜே.ஜேசுதாஸ் பெண்களைப் பற்றி கருத்து சொல்வதற்கு முன் முதலில் தன் வீட்டில் உள்ள பெண்களுக்கு அட்வைஸ் செய்யட்டும்” என்று நக்கல் அடிக்கின்றனர் ஃபேஸ்புக் பெண்கள்.
அவர்கள் இப்படி சொல்ல என்ன காரணம்? ஜேசுதாஸின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் ஜேசுதாஸின் மனைவி தர்ஷனா. இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் அதிகம் ஜீன்ஸ் பேன்ட் அணிபவர். அதுமட்டுமல்ல, நவநாகரீக ஆடை வடிமைப்பாளராகவும் உள்ள தர்ஷனா, கோபாலபுரத்தில் DVY என்ற ஆடை விற்பனை நிலையத்தையும் நடத்தி வருகிறார்.
மருமகள் மீதுள்ள உள்ள கடுப்பில் தான்... இப்படி பொது இடத்தில் பேசி மாட்டிக்கொண்டுள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
About tamil jaffna
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.