கல்கமுவ கிரிபாவே எனுமிடத்தில் பாடசாலையை சேர்ந்த 16 வயது மாணவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் 24 வயதுடைய சந்தேக நபர் மரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மரமொன்றில் ஏறி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றபோதே, மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
Tagged with: Srilankan_news
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
