இவர் 3 அடி மனைவி 6 அடி: இவர் நிலவை நிண்ணுகிட்டே தொட்டுடுவார் பாரு !
இங்கிலாந்தில் 3 அடி 7 அங்குல உயரமே உள்ள ஒருவர் 5 அடி 7 அங்குலம் உயரமுள்ள பெண் ஒருவரை காதலித்து வருகிற அபூர்வ ஜோடி தொடர்பான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இவ்விருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து – North Wales பகுதியைச் சேர்ந்த James Lusted என்ற 26 வயதுடைய நபர் 3 அடி 7அங்குல உயரமே உள்ளவர்.
தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் இவர் நபர், North Wales பகுதியைச் சேர்ந்தவரும், அதே பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருபவருமான Chloe Roberts என்ற 20 வயதுடைய பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வருகின்றார். இந்த நிலையில் குறித்த பெண்ணுடன் அவர் பூங்கா போன்ற பகுதிகளில் உலாவரும்போது புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன. தான் பணிபுரியும் விடுதிக்கு இவர் அடிக்கடி வருவார் என்றும் அந்த சமயத்தில் அவருடன் பேசி பழகியதாகவும் அதுவே நாளடைவில் காதலாக மாறியதாகவும் Chloe Roberts கூறியுள்ளார்.
Diastrophic Dysplasia என்ற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்ட James Lusted என்பவரது வளர்ச்சி சிறுவயதிலேயே நின்றுவிட்டதாகவும், எனினும் அவருடைய விடா முயற்சி, வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததால் அவரை காதலிப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
