பொலிஸார் எமது நண்பன். சாதாரணமாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்தான் நாம் பொலிஸ் நிலையத்துக்குச் செல்கின்றோம். எனினும் பொலிஸாருக்கே பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் நம்மிடையே கேள்விப்படுகின்றோம். பிரித்தானியாவிலுள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு திடீரென வெள்ளைக் குதிரை ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட மேற்கு இங்கிலாந்தின் Cheshire பொலிஸ் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வெள்ளைக் குதிரையை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் முயற்சி செய்திருந்த போதிலும் அது பலனளிக்கவில்லை. குறித்த பகுதியில் உள்ள தோட்டமொன்றில் இந்த வெள்ளைக் குதிரை வளர்க்கப்பட்டு வந்துள்ளது. வளர்ப்பவரின் கண்ணில் மண்ணை வீசிவிட்டு இந்தக் குதிரை தன் இஸ்டம்போல அலைந்துத் திரிந்துள்ளது. பின்னர் வழிதொரியாது திக்குமுக்காடியுள்ள இந்தக் குதிரை இறுதியாக பொலிஸாரின் உதவியைப் பெறுவதற்காகவே இவ்வாறு பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள நிலையில் அதனை பொலிஸார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளனர்.