மலேஷியாவில் தொழில்புரிந்து வந்த இளைஞர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலான தகவல் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட தொழில்தருனர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேஷியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த 26 வயதான மொஹமட் சப்ரீன் என்ற இளைஞன் 2013 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் மலேஷியாவிற்குச் சென்றுள்ளார். அவர் இறுதியாக மலேஷியாவில் வாகனம் கழுவும் இடம் ஒன்றில் தொழில் புரிந்துள்ளார். வாகனம் கழுவும் போது வாகனம் ஒன்றிற்கு ஏற்பட்ட சிறிய சேதம் ஒன்றினால், கோபமடைந்த தொழில் தருனர் அவரை அறையில் பூட்டிவைத்து அடித்துள்ளார். 2ம் நாளும் அடித்துள்ளார். இதனால் தான் சப்ரீன் இறந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது.
அவருடன் உடன் பணி புரிந்த நபர் தெரிவித்துள்ள கருத்தும், புகைப்படமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.