Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » ரெட் புல் குடித்தால் சிறகுகள் முளைக்கவில்லையா ? 10 டாலர்களை திருப்பி தருகிறார்களா ?
«
Next
Newer Post
»
Previous
Older Post

ரெட் புல் பானத்தை குடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம். பலர் மனதை கொள்ளை கொண்ட பானம் அது. 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இன் நிறுவனம் வெளியிட்ட எல்லா விளம்பரங்களிலும், ரெட் புல்லைக் குடித்தால் உங்களுக்கு “சிறகுகள் முளைக்கும்” என்று கூறிவந்துள்ளார்கள். ஆனால் உங்களுக்கு உண்மையில் சிறகுகள் முளைக்காது என்பது உண்மை. இருப்பினும் அப்படி ஒரு உணர்வாவது வரவேண்டும் இல்லையா ? அது கூட வரவில்லை என்று பெஞ்சமின் என்னும் நபர் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்கும் ரெட் புல்லுக்கு படு பாதகமாக முடிந்துள்ளது.
குடித்தால் சிறகுகள் முளைக்கிறதோ இல்லையோ, ஒரு காப்பி குடிப்பதைக் காட்டிலும் “கெஃபின்” என்னும் நச்சுப் பதார்த்தம் தான் அதில் அதிகம் உள்ளது என்று பெஞ்சமின் நீதிமன்றில் நிரூபித்துள்ளார். அதுபோக சிறகுகள் முளைக்கும் என்ற பீஃலிங் வரவே இல்லை என்று பலர் சாட்சி சொல்லியும் உள்ளார்கள். இதனை அடுத்து வழக்கின் தீர்ப்பு வரு முன்னரே அந்த நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதாவது 2002 - மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கு இடையே நீங்கள் ரெட் புல்லை வாங்கி குடித்து திருப்த்தி ஏற்படவில்லை என்றால், எங்கள் இணையத்தளத்திற்கு வாருங்கள். படிவத்தை நிரப்புங்கள் நாம் 10 டாலர்களை உங்களுக்கு திருப்பி தருகிறோம் என்று கூறியுள்ளது.
நீங்கள் முன்னர் ரெட் புல் வாங்கியதற்கான ஆதாரத்தை எனக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லை என்று, ரெட் புல் கம்பெனி கூறியது தான் தாமதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த இணையத்தளம் சென்று படிவங்களை நிரப்ப , ஆரம்பித்துள்ளார்கள். இதனால் ரெட் புல் இணையத்தளம் சேவர் கிராஷ் ஆகி , பாவனையாளர் சுமை தாங்க முடியாமல் நின்றுவிட்டதாம். 10 டாலருக்காக அமெரிக்கர்கள் இப்படியா பறப்பார்கள் ? குடித்தவுடன் சிறகு முளைக்கவில்லை என்று இப்படி பறக்கிறார்களே ?

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post