பருவ வயது மாணவர்களுக்கு உணர்வுகளை தூண்டும் என்று சொல்லி, ஒருவகை "மதன் மோதகம்" ஒன்றை விற்றுவந்த நபரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். மாரவில பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலுள்ள மாணவர்கள் பலர் இதனை பல காலமாக உண்டும் வந்துள்ளார்கள். இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால், சில ஆசிரியர்களுக்கு கூட இதுதொடர்பாக தெரிந்திருந்தும் அவர்கள் இதனைக் கண்டுகொள்வது இல்லையாம். இதேவேளை குறித்த அப்பாடசாலைக்கு புதிதாக வந்த வாத்தியார் ஒருவரே இதுதொடர்பாக கேள்வியுற்று, மாரவல பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே பொலிசார் பள்ளிக்கு அருகில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் வைத்து, இன் நபரைக் கைதுசெய்துள்ளார்கள். குறித்த நபரிடம் இருந்து 1000 த்திற்கும் அதிகமான "மதன் மோதகம்" கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த அளவு இந்த வியாபாரம் கொடி கட்டிப் பறந்துள்ளது. இந்த மதன மோதகத்தில் பல போதைப் பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளதாகவும், மூலக் கூறு பகுப்பாய்வுக்காக அதனை அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். மதன் மித்திரா , சிட்டுக்குருவி லேகியம், பான் பராக், சிக்-பென் என்று எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
அட இது என்ன மதன மோதகம் என்று நினைக்கிறீர்களா ? இன்னும் சில நாட்களில் இது தொடர்பான மேலதிக செய்திகள் வெளியாகிவிடும்.