பொதுபல சேனா தொடர்பாக பல தமிழர்கள் அறிந்திருப்பார்கள். கொழும்பிலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதன் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. இந்த கடும்போக்கு சிங்கள அமைப்பிற்கு கோட்டபாய ராஜபக்ஷவின் ஆதரவும் இருக்கிறது. இந்த அமைப்பில் பல தேரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல் இலங்கைப் பொலிசார் கைவைப்பதே இல்லை. இதேவேளை பொதுபல சேனாவின் முக்கிய உறுப்பினரான ஞானசார தேரர், கராத்தே பயிற்சிகளையும் எடுத்துவருகிறாராம். இந்து ஆலயங்களை அடித்து நொருக்கும் பொதுபலசேனாவினர், தமிழர்களை தாக்கவும் அஞ்சியது இல்லை. இவர்களே கடந்த மாதம் முஸ்லீம்களையும் தாக்கினார்கள். அந்த பிரச்சனை ஓய்வதற்கு முன்னர் இந்த புகைப்படமும் வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது.
குறித்த புகைப்படத்தில் ஞானசார தேரர் ஆட்களை அடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு புத்த பிக்கு அமைதியாக இருக்கவேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று புத்தபிரான் கூறிச்சென்றார். ஆனால் இங்கே பாருங்கள் இச்சிங்கள தேரரை.
Home
»
India
»
Srilanka
»
Srilankan_news
»
இந்தியா செய்திகள்
»
இலங்கை செய்திகள்
» தமிழர்களையும் முஸ்லீம்களையும் அடிக்க ஞானசார தேரர் பயிற்சி எடுக்கிறாராம்
Tagged with: India Srilanka Srilankan_news இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
