விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்ட தமிழக அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட ஊறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ வைப்பகத்தின் மூலம் பணம் பெற்ற தமிழக அரசியல்வாதிகள் பற்றிய உறுதியான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் கலந்து கொண்ட சுப்ரமணியம் சுவாமி இவ்வாறான தகவலை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவில் இருந்த விடுதலைப் புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்து, புலிகளின் ஆதரவாளர்களுக்கு, புலிகள் வழங்கிய பணம் மற்றும் அது பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தம்வசம் இருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Home
»
India
»
Indian_news
»
இந்தியா செய்திகள்
» புலிகளிடம் பணம்பெற்ற தமிழக அரசியல்வாதிகளின் விபரங்கைள அம்பலமாக்குவேன் !
Tagged with: India Indian_news இந்தியா செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.