தனது இசையின் மூலம் இந்தியாவின் பார்வையை தமிழுக்கு திருப்பியவர் ஏ.ஆர். ரகுமான் ஆவார். அதே இசைக்காக ஆஸ்கர் விருது பெற்று உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பினார் . இவரது இசைக்கு இந்த உலகமே அடிமையாகும். குறிப்பாக இவரது மெலோடி பாடல்களுக்கு பல அடிமைகள் உள்ளார்கள். இவருடைய இன்னொரு சிறப்பு இவரது எளிமை. ஆஸ்கர் விருது பெற்ற போது கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று எளிமையாக கூறினார்.

இப்படி பல சிறப்புகளை பெற்று உள்ள இவருக்கு டாக்டர் பட்டத்தை கொடுக்க உள்ளது அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைபள்ளியான பெர்க்லீ. இந்த கௌரவ டாக்டர் பட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அன்று கொடுக்கப்பட உள்ளது. இந்த விழா பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. அவரை கௌரவிக்கும் விதமாக அவரது இசையில் உருவான சில பாடல்களை வைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு அவரே தலைமை தாங்க உள்ளார்.
இனி இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் , டாக்டர் ஏ.ஆர்.ரகுமான் ஆக போகிறார்.
Tagged with: சினிமா
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.