Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » இறந்து கிடக்கும் அண்ணா ! மறைந்திருக்கும் ரகசியம் !
«
Next
Newer Post
»
Previous
Older Post

ரஷயாவில் வசிக்கும் லாறிசா என்னும் பெண்ணுக்கு, அவரது அண்ணா சுடப்பட்டு இறந்துவிட்டார் என்ற படத்தை காட்டுகிறார் ஒரு வாடகைக் கொலையாளி. சற்றும் அதிர்சியுறாமல் அவர் கொலைக்கான பனத்தை தனது பாக்கெட்டில் இருந்து தேடி எடுத்து கொலையாளியிடம் கொடுக்கிறார் லாறிசா. ஆனால் சிறிது நேரத்திலெல்லாம் கைதாகி பின்னர் 8 வருட சிறைத் தண்டனையைப் பெறுகிறார். நடந்த சில சம்பவங்கள் அதிர்சியை தரவல்லது.
லாறிசா தனது அண்ணாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது அண்ணவையே போட்டுத் தள்ள அவர் நினைத்துள்ளார். தனது கம்பியூட்டரில் இன்ரர் நெட் சென்று, ஆன்லைனில் தேடியுள்ளார். காசுக்காக கொலைசெய்பவர்கள் என்று தேடியவேளை அவருக்கு ஒரு நபர் சிக்கியுள்ளார். அன் நபரோடு தொடர்புகளை மேற்கொண்டு, ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா தருவதாகவும், தனது அண்ணாவை கொலைசெய்யவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த நபர் ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவர் ஒரு பொலிஸ் இலாகாவைச் சேர்ந்தவர் என்பது இப்பெண்ணுக்கு தெரியாது.
அந்த ரஷ்ய சி.ஐ.டி தான் கொலைசெய்யவேண்டிய நபரை அணுகி நிலைமையை எடுத்துச் சொல்லியுள்ளார். அவர் ஒப்புதலுக்கு அமைவாக அவரை ஒரு புதரில் படுக்கவைத்து மண்டையில் சுடப்பட்டது போல ஒரு போட்டோவை எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோவை தான் அப்பெண்ணிடம் காட்டி, உன் அண்ணா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். சற்றும் பதற்றமாகாத அப்பெண், உடனே தனது பாக்கெற்றில் வைத்திருந்த காசை எடுத்து அந்த கொலையாளியிடம் கொடுத்துள்ளார்.
அதனைத் தான் அவரும் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். தனது உடலில் பொருத்தி இருந்த கமரா மூலம் நடந்தவை அனைத்தையும் அவர் வீடியோவாக பதிவுசெய்தும் இருந்தார். காசு கொடுக்கும் வேளையில், அருகில் காத்து நின்ற பொலிசார் அப்பெண்ணை கையும் களவுமாக கைதுசெய்தார்கள். கொலை முயற்சிக்கான தண்டையாக 8 வருட சிறைத்தண்டனையை அவர் பெற்றுள்ளார். சின்ன விடையத்திற்கு கூட ஆளைவைத்து கொலைசெய்யும் ஒரு நாடாக ரஷாயா மாறிவிட்டது. காசுக்காக ஆட்களை கொலைசெய்யும் நபர்கள் அங்கே நூற்றுக்கணக்கில் உள்ளார்கள். ஆனால் இப்பெண் கிரக நிலை இங்கே சென்று மாட்டி இருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அண்ணன் உயிர் கெட்டிபோல இருக்கே 

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post