தங்களை பற்றிய தகவல்களை தேடும் போது, முடிவுகளில் சிலவற்றை நீக்கி விடுமாறு கூகுளுக்கு 25,000 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் சமீபத்தில் ஒரு வெளிப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், தங்கள் பெயரை கூகுளில் தேடும்போது கிடைக்கும் தகவல்களில் இருக்கும் சில URL எனப்படும் முகவரிகளை நீக்கவேண்டுமென ஐரோப்பாவில் இருந்து 1,46,357 கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கைகளில் 25,206 கோரிக்கைகள் ஜேர்மனியில் இருந்து வந்துள்ளதாகவும், அவர்கள் நீக்க சொல்லியுள்ள முகவரிகளால் கிட்டத்தட்ட 88,973 முகவரிகள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பதிவான கோரிக்கைகளில் 53 சதவிகித URL முகவரிகளை நீக்கிவிட்டதாகவும், 47 சதவிகித கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீக்கப்பட்ட தகவல் நடைமுறை எல்லாம் ஐரோப்பிய கூகுள் பதிப்புகளை மட்டுமே பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களைப் பற்றி தகவலை தேடும்போது, வரும் முடிவுகளில் சிலவற்றை நீக்க கோரிக்கை விடுக்கலாம் என கூகுள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது