Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » 10 மணி நேரமே காதலன் உயிர் வாழ்வான்: நெஞ்சை உருக்கும் திருமணம் (வீடியோ இணைப்பு)
«
Next
Newer Post
»
Previous
Older Post

10 மணி நேரம்தான் காதலன் உயிர்வாழ்வான் என தெரிந்தும் காதலி அவரை கைபிடித்துள்ள உருக்கமான சம்பவம் பிலிப்பைன்ஸில் நடைபெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரவ்டன் கோ பாங்கோகா (29) இவர் லிசில் (23) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.
வரும் யூலை மாதம் இவர்களுக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் ரவுடன்காவுக்கு கடந்த மே மாதம் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடரந்து அவர் மணிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருடைய புற்றுநோய் நாளுக்கு நாள் முற்றி அவரது கல்லீரல் முழுவதும் செயலிழந்துவிட்டது. இதனால் அவர் 12 மணிநேரத்திற்குள் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். தனது காதலர் மரணமடைவதற்குள் அவரை கைபிடிக்க காதலி சிலில் விரும்பினார்.
இதனால் தங்களுடைய திருமணமத்தை உடனடியாக நடத்த வேண்டும் என கூறினார். ஆனால் உறவினர்கள் எல்லோரும் ரவௌடன் 12 மணி நேரத்தில் இறந்து விடுவான் உனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறியுள்ளனர்.
இருந்தாலும் லிசில் தனது காதலரை கைபிடிப்பதில் பிடிவாதமாக இருந்தார், இதனால் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
மருத்துவமனையிலேயே ஒரு அறையில் அலங்காரம் செய்யப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த ரவுடனுக்கு திருமண ஆடை அணிவித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் கண்ணீருடன் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து மிகச்சரியாக 10 மணி நேரத்தில் ரவ்டன் மரணம் அடைந்தார்.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post