
நையீரியாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றுகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானம் ஸ்பெயினில் தரையிறங்கியுள்ளது. இதன்போதே குறித்த பயணியிடம் எபோலா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினிலுள்ள மட்றிட் வைத்தியசாலையில் பணியாற்றிவந்த தாதிப் பெண் ஒருவர் எபோலா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக அண்மையில் இனங்காணப்பட்டிருந்தார். மேற்கு ஆபிரிக்க நாடுகளில் அல்லாமல் வெளிநாட்டில் இனங்காணப்பட்ட முதலாவது எபோலா நோயாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த தாதிப் பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரது நிலைமை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்த தாதிப் பெண்ணின் கணவர் உட்பட எபோலா வைரஸின் அறிகுறிகள் தோன்றிய மேலும் 15 பேர் மட்றிட் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் தான் ஏர் பிரான்சில் சென்ற ஒருவருக்கும் இந்த எபொல்லா தொற்று காணப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் இருந்த அனைவரும் எபொல்லா வைரசின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் போகும் அளவு இது பெருகும் வாப்பு உள்ளது. ஆனால் தொடர்ந்தும் ஆபிரிக்க நாடுகளுக்கு விமான சேவை தொடர்கிறது.