
சில நாட்களுக்கு முன்னர் பாடம் நடத்தவெனச் சென்ற ஆசிரியர் ஒருவர், சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார். பலருக்கும் தெரியும் சில பழைய பாடல்களில் புலவர்கள் பெண்களின் அழகை அளவுக்கு மிஞ்சி ரசித்து எழுதி இருப்பார்கள். குறித்த அந்த இடத்தில் வந்ததும் அதற்கான முழு விளக்கத்தையும் தரும்படி மாணவர்கள் ஆசிரியரை கேட்டுள்ளார்கள். அவர் மறுக்கவே அச்சுறுத்தியும் உள்ளார்கள். இதேவேளை புலவர் இதனைத்தான் இப்படிச் சொல்லியுள்ளார் என்று சற்றும் நாக்கூசாமல் ஒரு மாணவன் எழுந்து பச்சை தூசனத்தில் கூறியுள்ளான்.
இதனால் மிரண்டுபோன வாத்தியார் அவரை எச்சரிக்க முயன்றவேளை, அனைத்து மாணவர்களும் கூக்குரல் இட்டு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் ஆசிரியர் செய்வது அறியாது தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் எந்தம் பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. யாழில் ரவுடிகள் தொல்லை தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றால், மாணவர்களும் நாளுக்கு நாள் ரவுடியாக அல்லவா மாறி வருகிறார்கள். புலிகள் யாழில் இருந்திருந்தால் பச்சை மட்டியால் ஒரு காட்டுக் காட்டியிருப்பார்கள். பயத்திலாவது மாணவர்கள் ஒழுக்கமாக இருந்திருப்பார்கள் என்கிறார்கள் யாழ் வாசிகள்.