அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் ஒரு சிறு குழந்தையால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணியின் குழந்தை ஒன்றினாலே இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மானிகையின் பாதுகாப்பானதும் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி சுற்றுலா பயணி ஒருவரின் குழந்தை தவழ்ந்து நுழைந்து விட்டதால், வெள்ளை மாளிகையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை கருவிகள் அலறின.
இதனால் அசம்பாவிதம் நிகழப் போவதாக அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர் சந்திப்புக்கு தயாராக இருந்த அதிபர், ஒபாமாவை சிறிது நேரம் தாமதிக்கச் செய்தனர். அதன் பிறகு, சிறு குழந்தையால் தான், பிரச்னை என்பதை அறிந்ததும், சிறிது நேர தாமதத்திற்கு பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்தார் அதிபர் ஒபாமா.
அமெரிக்கா வெள்ளை மாளிகையில் புகுந்த குழந்தை: பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது.
