இலங்கைத் தமிழரான கனேஸ்வரன், பிரித்தானியாவில் அயர்லாந்து பெண் ஒருவரை திருமணம் முடித்து அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை தான் சிவா ஆகும். இவருக்கு வயது 25. பிரித்தானியாவில் உள்ள "வான்டர்" என்னும் பிரபல்யமான இசைக் குழுவில் இவ இருந்துள்ளார். பல ஆங்கில பொப் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட "வான்டட்" என்னும் இசைக்குழுவில் இருந்த ஒருரே ஒரு கவர்சிகரமான இளைஞர் இவராக தான் இருக்க முடியும். பல பெண்களின் மனதைக் கொள்ளையடித்த இந்த ஈழத் தமிழ் இளைஞர் தற்போது இந்த பாட்டுக் குழுவில் இல்லை. மாறாக அவர் எல்.ஏ சென்றுவிட்டார். அமெரிக்காவில் இவர் ஒரு ஹலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லண்டனை தளமாக கொண்டு செய்திகளை வெளியிட்டு வரும், டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் ஒரு சிறப்பு நேர்காணலை கொடுத்துள்ளார். அதில் தான் தண்ணி அடிப்பதை, சிகரெட் புகைப்பதை மற்றும் சொக்கிளேற் சாப்பிடுவதை கூட நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கட்டளகான உடலை தான் பெற்றால், தான் நடிக்கவுள்ள படத்திற்கு அது ஏதுவாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள ஈழத் தமிழ் பொப் இசைப் பாடகி மாயா போல, ஆண்கள் வரிசையில் வெள்ளைக்காரர் மத்தியில் மிகவும் பிரபல்யமாக திகழும் ஒரே ஈழத் தமிழ் இளைஞர் சிவா கனேஸ்வரன் என்றால் அது மிகையாகாது.
லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழரான சிவா கனேஸ்வரன் ஹலிவுட்டில் நடிக்க ஆரம்பிக்கவுள்ளார் !
