ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள மெராபாத் விமான நிலையத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தபான் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான அந்த விமானத்தில் 8 பணியாளர்கள் உள்ளடங்கலான 48 பேர் பயணித்துள்ளனர். மெராபாத் விமான நிலையத்திலிருந்து கிழக்கில் தபாஸ் நகருக்கு செல்வதற்காக விமானம் புறப்பட்டுள்ளது. .ந்த விமான பறப்பு உள்ளுர் விமான பறப்பு என்றே கூறப்படுகின்றது. பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.18 மணிக்கு விபத்து நடந்துள்ளது.
அதில் பயணம் செய்த 40 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஈரானிய விமானங்கள் அனைத்தும் பழையதும் பொருத்தமற்ற தொழில் நுட்ப வசதிகளை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் அனைத்தும் 1979 ஆம் ஆண்டு இஜ்லாமிய புரட்சிக்கு முன்னர் வாங்கியதாகவே கூறப்படுகின்றது. மேலும் போதியளவ தகுந்த பராமரிப்பு இல்லை என்றும் கூறப்படுகின்றது. இதை அந்நாட்டு ஊடகங்களான ஐ.ஆர்.என்.ஏ. மற்றும் பார்ஸ் நியூஸ் ஏஜென்சிகளும் உறுதி செய்துள்ளன.
பத்துக்கு இயந்திர கோளாறே காரணம் என கூறப்படுகிறது. இது இந்த மாதத்தில் மட்டும் நிகழ்ந்த 4-வது பெரிய விமான விபத்தாகும். அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள சில தடைகள் காரணமாகவும் ஈரான் அரசு தனது விமானங்களுக்கு உரிய பாராமரிப்பினை செய்ய முடியாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் விமான விபத்து; 40 பயணிகள் பலி
