பிரித்தானியாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 5 தினங்களாக பிரித்தானியாவில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது பெய்யவிருக்கும் மழையானது 15 நாட்கள் பெய்யும் மழைக்கு நிகரானது.
இதனால் கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வாகன ஓட்டுநர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த மழையானது ஒரு மாதம் காலம் நீடிக்கும் என்பதால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் தென்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


