கனடாவில் 4 வயது சிறுவனை தண்டித்து அவனது பெற்றோர் அளித்த தண்டனை விபரீதத்தில் முடிந்துள்ளது.
கனடாவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள டவுன் ஹவுஸில் வின்ச் அவெனியு - லெஸ்லி வீதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு 4 வயதில் சிறுவன் உள்ளான்.
சமீபத்தில் நெடுநேரம் நின்று, உயிரை விட்ட சிறுவன் மரணத்திற்கு இவர்களே காரணம் என பொலிஸ் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சிறுவன் தவறு ஒன்றை செய்துள்ளான் என்றும் அதை கண்டிக்கும் வகையில் நாள் முழுவதும் அவனது பெற்றோர் அவனை நிற்க வைத்ததால் இறந்தான் எனவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.