கஜகஸ்தான் நாட்டில் இளம்பெண் ஒருவரை கட்டாய திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தானின் அக்மோலா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கட்டாயமாக தனது கணவன் வீட்டிற்கு அழைந்து மணமகன் வீட்டின் உறுப்பினர்கள் காரில் வந்துள்ளனர்.
இதன்பின் பெண்ணை இழத்து சென்றபடி காரில் அமரவைத்து, தங்களது வீட்டிற்கு சென்று கட்டய திருமணத்தை செய்து வைக்கின்றனர்.
அப்போது பெண் தன்னை வீட்டு விடுமாறு கெஞ்சி கேட்டாலும், அதை கேட்காமல் அவளை இறுக்கிப்பிடித்த படி அழைத்து சென்றுள்ளனர்.
இதற்கு பெண்ணின் பெற்றோரும் ஆதரவளிக்கும் வகையில் மலர்களை தூவி ஆசிர்வதப்பது போல் காகித தாள்களை தூவி வழி அனுப்புகின்றனர்.
இது போன்ற திருமணத்திற்கு மணமகனால் பெண்ணின் பெற்றோர்களுக்கு அதிக பணம் கொடுப்பதால் அவர்கள் கட்டாய திருமணத்திற்கு உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது.
64 சதவிகித பெரியவர்களும், 74 சதவிகித இளைஞர்களும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் இதனை சட்டமாக்க அரசு பரிசிலனை செய்து வருகிறது.
ஆனால் பெண்ணின் சம்மதம் இல்லாமல் இப்படி நடந்துக்கொள்வது காட்டுமிரண்டித்தனமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் வெகு காலங்களாக கஜகஸ்தான் போன்ற நாடுகளில் நடந்து வருவது குறிப்பிடதக்கது.
Tagged with: World 360
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.