சுவிட்சர்லாந்தில் மனைவியை கொள்ள முயன்ற கணவனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் ஜெனிவா மாகாணத்தை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு தனது மனைவியை கொள்ள ஆட்களை அனுப்பியுள்ளார்.
ஆனால் அதிர்ஷடவசமாக இவரது மனைவி உயிர் தப்பியதியதால் இவர் தனது ஆட்களுடன் பொலிசில் பிடிபட்டுள்ளார்.
இரண்டு குழந்தைக்கு தாயான தனது மனைவியை பணத்திற்காக இரண்டு வருடங்களாக கொலை செய்ய முயற்சித்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயுள் காப்பீட்டின் மூலம் கிடைக்கும் 2 மில்லியன் பிரான்குகள் பணத்திற்காக இந்த கொலை நடத்த திட்டமிட்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அந்த பெண்ணின் கணவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய சென்ற நபருக்கு 11 அண்டுகளும், வெளியில் காரில் காத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.