Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » திருமணமான சிறிது நேரத்தில் மணமகன் உயிரிழந்த பரிதாபம்
«
Next
Newer Post
»
Previous
Older Post

அமெரிக்காவில் மணமகன் ஒருவர் திருமணமான சில மணி நேரத்திலேயே கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த ஆண்ட்ரியூ (27) மற்றும் ரூத் (37) ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
பின்னர் அங்கிருந்து வரவேற்பு விழாவிற்கு புது தம்பதிகளான ஆண்ட்ரியூ, ரூத் மற்றும் ஆண்ட்ரியூவின் தோழி எலிசபெத்தும் காரில் சென்றுள்ளனர்.
அப்போது வழியில் சாலையில் லொறியுடன் எற்பட்ட விபத்தில் சிக்கிய அவர்களில் எலிசபெத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது மணமகன் ஆண்ட்ரியூ சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
தற்போது ஓட்டுனர் மற்றும் ரூத்திற்கு மருத்துவமனையில் காயங்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பொலிசார் இதுபற்றி கூறுகையில், காரில் சென்ற நால்வரும் சீட் பெல்ட் அணியவில்லை என்றும் விபத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருமணம் முடிந்ததும் ஆண்ட்ரியூ தனது பேஸ்புக் பக்கத்தில் தனது வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்க தயாராக உள்ளதாக பதிவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.


About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post