யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கு, கட்டைவேலி பகுதியில் மகளை பொல்லால் தாக்கிய தந்தையை புதன்கிழஇமை (15) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட நபர், மதுபோதையில் புதன்கிழமை (15) காலை வீட்டுக்கு வந்து, தனது 15 வயது மகளை பொல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மகள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், தந்தையான சந்தேகநபரை கைது செய்தனர். சந்தேகநபரை வியாழக்கிழமை (16) யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.