Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » நகம் கடிச்சா கேன்சர் வருமா? ஷாக் தகவல்
«
Next
Newer Post
»
Previous
Older Post

நாம் மிக சாதாரணமாக கருதும் நகம் கடிக்கும் பழக்கத்தால் கேன்சர் வரலாம் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான நபர்களிடம் மிக சாதாரண காணப்படும் பழக்கம் தான் நகம் கடிப்பது.
இதனால் ஆபத்தான பின்விளைவுகள் காத்திருக்கின்றது என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதற்கு என்ன காரணம் இருக்கும்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என யோசிக்கிறீர்களா?
மனச்சோர்வும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இது பழக்கமாகிவிடுவதும் முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் உலக அளவில் 30 சதவீத குழந்தைகள், 45சதவீத பதின்ம வயதினர் மற்றும் 25சதவீத முதியவர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
விளைவுகள்
* நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா (Salmonella), இ.கோலி (E.Coli) பக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன.
இதனால் நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.
* பாரனைஷியா (Paronychia) என்கிற தோல் வியாதி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் ஒன்று சேர்ந்து நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க வைத்துவிடும்.
* நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
* நகம் கடிப்பதால் பற்களில் பக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.
* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post