மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மீதமுள்ள 2 போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறுவதாக இருந்த 3வது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று தெரிவு செய்யப்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கு பின் நடைபெறும் டி20 போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற ராயுடு, டி20 போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை.
ஒருநாள் போட்டிக்கான அணியில் அக்சார் படேல் புதிதாக இடம் பிடித்துள்ளளார். டி20 போட்டிக்கான அணியில் மணிஷ் பாண்டேவுடன் அக்சார் படேலும் இடம்பிடித்துள்ளார்.
ஒருநாள் அணியில் உள்ள வீரர்கள் விவரம்:
டோனி, தவான், ரஹானே, கோஹ்லி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.
டி20 அணியில் உள்ள வீரர்கள் விவரம்:
டோனி, தவான், ரஹானே, கோஹ்லி, ரெய்னா, பின்னி, ஜடேஜா, அக்சார் படேல், கர்ன் சர்மா, புவனேஸ்வர் குமார், ஷமி, சாம்சன், மணிஷ் பாண்டே மற்றும் உமேஷ் யாதவ்.
Tagged with: Indian_news
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.