பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நபிகள் நாயகத்தை இழிவாக பேசியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் நகரை சேர்ந்த ஆசியா பிப்பி (Asia Bibi Age-42) என்ற கிறிஸ்துவ பெண் கடந்த 2009ம் ஆண்டில் பழத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென இவருக்கு தாகம் ஏற்பட்டதால், உடன் வேலைப்பார்க்கும் இஸ்லாமிய பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த பெண் கிறிஸ்துவர்கள் சுத்தமற்றவர் என கூறி, அவருக்கு தண்ணீர் தர மறுத்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 5 மணி நேரத்திலேயே பிப்பி நபிகள் நாயகத்தை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சில இஸ்லாமிய நபர்கள் பிப்பியின் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இவர் கடவுளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக வழக்கு பதிவு செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கிறிஸ்துவ பெண் என்றதால் தான் பாகிஸ்தானில் அனுபவித்த கொடுமைகள் பற்றி விவரித்துள்ளார். இதற்கு இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது பிப்பியின் விடுதலைக்காக 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 400,000 நபர்கள் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tagged with: World_news
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.



