Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » செவ்வாயின் துணைக் கோளான போபோஸை படம் பிடித்து அனுப்பியது மங்கள்யான்
«
Next
Newer Post
»
Previous
Older Post

செவ்வாய் கிரகத்தின் துணைக் கோளான போபோஸை படம் பிடித்து மங்கள்யான் விண்கலம் அனுப்பியுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதிசெவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியது.
மங்கள்யான் விண்கலத்தில் உள்ள வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளன என்று ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்தது. தற்போது மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் துணைக் கோளான போபோஸை படம் பிடித்து அனுப்பியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை போபோஸ் மற்றும் டெயிமோஸ் என்ற இரண்டு துணைக் கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் பெரிய துணைக் கோளான போபாஸை மங்கள்யான் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்களை இஸ்ரோ தனது சமூகவலைதளம் மூலம் வெளியிட்டுள்ளது. போபாஸ் கோள், தனது வழக்கமான சுற்றுப்பாதையில் செவ்வாய் மேலாக கிழக்கு, மேற்காக பயணம் செய்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு மேலே, 66.275 கி.மீ உயரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போபோஸ் மற்றும் டெயிமோஸ் என்ற இரண்டு துணைக் கோள்கள் 1877ம் ஆண்டு மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post