கடந்த 24ம் திகதி அதிகாலை, நியூயோர்க் நகரில் வைத்து, நடந்த தண்ணி பார்டியில் ஒன்றில் வெறி உச்சத்திற்கு ஏற இலங்கைத்
தூதுவரை சஜின் வாஸ் தாக்கியுள்ளார். பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸை,
இலங்கை வெளியுறவு அமைச்சின்
செயலாளராக இருக்கும் சஜின் தாக்கினார். காலால் போட்டு மிதித்துள்ளார். இச்செய்தியை
தமிழ் இணையப்பரப்பில் முதன் முதலாக அதிர்வு இணையமே வெளியிட்டது. இப்படி ஒரு சம்பவம்
நடக்கவில்லை என்றும், மேலும் இச்செய்தியை இருட்டடிப்புச் செய்யவும் மகிந்தர் அலுவலகம் கடுமையான உத்தரவை
பிறப்பித்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இதுதொடர்பான செய்திகள் சிங்கள இணையங்களிலும்
வெளியாக ஆரம்பித்து விட்டது.
இன்று காலை (லண்டன் நேரப்படி) , தற்போது லண்டனில் தங்கியுள்ள கிறிஸ் நோனிஸ் ஒரு ஆங்கில
இணையத்திற்கு நேர்காணலை வழங்கியுள்ளார். அதில் அவர் தன்னை கேவலாமாக அடித்தார்கள் என்று
ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கான ஆடியோவை நாம் இங்கே இணைத்துள்ளோம். இதுபோன்ற செய்திகளை
நாம் அடிக்கடி பிரசுரிப்பதால் தான் 2012ம் ஆண்டு மகிந்தர் அதிர்வு இணையத்தை இலங்கையில் தடைசெய்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்கிவரும் சுமார் 3 இணையங்கள் இலங்கையில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அதில் அதிர்வு, தமிழ் நெட், மற்றும் லங்காவெப் நியூஸ் ஆகிய இணையங்ள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்
ஆகும்.
About tamil jaffna
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.