பிரிட்டனில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையான M25 நடந்த சம்பவம் ஒன்று உலகையே அதிரவைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் M25 நெடுஞ்சாலையில் சந்திப்பு 5க்கு அருகாமையில் சென்றுகொண்டு இருந்த கார் ஒன்று பாலத்தில் இருந்து விலகி, பாலத்தின் முடிவில் உள்ள இருப்பு கம்பிகளையும் உடைத்துள்ளது. இறுதியாக இருந்த ஒரு இருப்பு கம்பி மட்டும் உடையாத காரணத்தில் கார் கீழே விளவில்லை. அந்தரத்தில் கார் தொங்கிக்கொண்டு நின்றுள்ளது. பல பயணிகள் தமது காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகில் சென்றாலும் அவர்களுக்கு உதவமுடியவில்லை. கரணம் என்னவென்றால் அந்தக் காரில் 2 பேர் இருந்துள்ளார்கள்.
ஓட்டுன் பக்கம் உள்ள ஆளை முதலில் மீட்க்கவேண்டும். மாறாக பிரயாணிகள் பக்கமுள்ள ஆளை முதலில் வெளியே எடுத்தால் மறு முனையில் பாரம் அதிகரித்து கார் கீழே விழவும் வாய்ப்பு உள்ளது. உண்மையில் சொல்லப்போனால் மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியுள்ளார்கள் அதில் இருந்த பயணிகள் இருவரும். சுமாராகச் சொல்லப்போனால் ஒரு 2 அங்குலம் கூடுதலாக கார் பாலத்தின் முடிவு வரை சென்றிருந்தால் கார் நிச்சயம் பள்ளத்தில் விழுந்து இருக்கும் என அதனை இறுதியில் மீட்ட தீ அணைக்கும் படையினர் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
இந்த விபத்து குறித்த புகைப்படங்களை பொலிசார் நேற்று வெளியிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
