Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » அமெரிக்காவில் 10 மாத குழந்தை-பாட்டியை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை !
«
Next
Newer Post
»
Previous
Older Post

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கை குழந்தையை கடத்திக் கொன்ற குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநாதன் யண்டமூரி (28) என்ற இளைஞர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு பணம் வைத்து சூதாடும் பழக்கம் இருந்ததால் தன்னிடம் சூதாடுவதற்கு வருமானம் போதவில்லை என்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியரின் வீட்டில் இருந்த 10 மாத கைக்குழந்தையை கடத்திச் சென்று குழந்தையின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்த கைக்குழந்தையின் பாட்டியான சத்யவதி வென்னா (61), தனது பேத்தியை மிரட்டல் விடுத்த நபரிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சத்யவதியை கத்தியால் குத்திக் கொன்ற ரகுநாதன், குழந்தையின் சத்தம் வெளியே வராமல் இருக்க அந்தக் குழந்தையின் வாயில் கைக்குட்டையை வைத்து அடைத்துள்ளார்.
பின்னர் அதன் தலையில் ஒரு துணியை கட்டி பெட்டிக்குள் வைத்து அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள 6வது மாடியில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ரகுநாதனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post