சுவிட்சர்லாந்து நாட்டு பாராளுமன்றத்தில் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் தனது நிர்வாண படங்களை தானே எடுத்து அவற்றை டுவிட்டர் வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த படங்களை பார்த்து அதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த படங்களில் பெரும்பாலானவை அவரது அலுவலகத்தில் எடுக்கப்பட்டவை ஆகும்.
இதுபற்றி அந்த பெண் அதிகாரி கூறுகையில்,
இது அரசு ஊழியர்களுக்கான விதிமுறையை மீறிய செயல் ஆகாது என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்றும் தெரிவித்ததாக அந்த நாட்டின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. உங்களுடைய இந்த படங்களை உங்கள் சக ஊழியர்கள் பார்ப்பார்களே என்ற கவலை உள்ளதா? என்று கேட்டதற்கு, அதுபற்றிய எண்ணமும் என் மனதில் இருக்கிறது என்று அவர் பதில் அளித்தார். ஆனால் அந்த பெண் அதிகாரி எதற்காக தனது நிர்வாண படங்களை வெளியிட்டார் என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை.
இதுபற்றி சுவிட்சர்லாந்து அரசின் மனிதவளத்துறை செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், இது அரசு ஊழியர் தனது கடமையை மீறிய செயலாக கருதப்படுமா? இல்லையா? என்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார். பிந்திக் கிடைத்த தகவல்களின் படி குறித்த பெண் வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
Home
»
World
»
World_news
»
உலகச் செய்திகள்
» தனது நிர்வாணப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுவிஸ் நாடாளுமன்ற பெண் செயலாளர்
Tagged with: World World_news உலகச் செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

