திருகோணமலையில் விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்பட்டதா என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை - இந்திய உடன்படிக்கையை உதாசீனம் செய்து, சீன நிறுவனமொன்றுக்கு விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இது தொடர்பிலான மெய்யான நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.
5 பில்லியன் ரூபா செலவில் திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க சீன நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அமைச்சர் பீரிஸ் இந்த விமான பராமரிப்பு நிலையம் குறித்து பேசியுள்ளார்.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீறும் வகையில் சீன நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
உடன்படிக்கையில் இரு நாடுகளினதும் பௌதீக ஒருமைப்பாடு, பாதுகாப்பு போன்றன தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
விமான பராமரிப்பு நிலையம் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க தீர்மானிக்கவில்லை – ஜீ.எல்.பீரிஸ்
திருகோணமலை நகரில் விமான பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவிததுள்ளார்.
ஐந்து பில்லியன் ரூபா செலவில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அரசாங்கம் திருகோணமலையில் ஆரம்பிக்க உள்ளதாக ரணில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இ;வ்வாறான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது உண்மைதான். எனினும், எங்கு அமைப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குழப்பி அரசியல் இலாபமீட்ட முயற்சிக்கின்றார் என அமைச்சர் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
Home
»
India
»
Indian_news
»
Srilanka
»
Srilankan_news
»
World_news
»
இந்தியா செய்திகள்
»
இலங்கை செய்திகள்
» விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க சீனாவிற்கு அனுமதியளிக்கப்பட்டதா?!– ரணில் - தீர்மானிக்கவில்லை!– ஜீ.எல்.பீரிஸ்
Tagged with: India Indian_news Srilanka Srilankan_news World_news இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
