Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » » » 84 வயது முதியவர் ஒட்டப்பந்தயங்களில் 54 தங்கப்பதக்கங்களை வெல்ல காரணமான இளைஞர்
«
Next
Newer Post
»
Previous
Older Post

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் உள்ள சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த 84 வயதான தவ்லத் ராம் என்ற முதியவர் பல்வேறு ஒட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு 54 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

100, 200, 400 மீட்டர் என பல்வேறு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பங்கேற்று கலக்கிய தவ்லத் ராம், சமீபத்தில் ஆல்வாரில் நடைபெற்ற “யுவராணி ஓட்டப்பந்தயப் போட்டி”யில் கலந்து கொண்டு ஷாட்புட், ஜாவ்லின் த்ரோ, ஒட்டப்பந்தயம் மற்றும் டிஸ்கஸ் த்ரோ ஆகிய நான்கு போட்டிகளுக்கான தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

24 வருடங்களுக்கு முன் பாபா பூர்ணாணந்தாவின் நினைவாக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளுமாறு தன்னை இளைஞர் ஒருவர் ஊக்குவித்ததாக கூறிய தவ்லத் ராம், தனது மனைவியும் பந்தயங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதாக கூறியுள்ளார். முதலில் தயங்கிய தான், பின்னர் துணிச்சலுடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக தெரிவித்தார். அப்போது உலகத்தை வென்றதாக தனக்கு தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அந்த இளைஞரையே தனது குருவாக பாவித்து வருவதாக அந்த முதியவர் மேலும் கூறினார்.

இன்று வரை அந்த இளைஞரும் ஓட்டப்பந்தயப்போட்டிகள் எங்கு நடந்தாலும் முதியவரிடம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. அவரது திறமையை மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே தவ்லத் ராமின் நீண்ட நாளைய விருப்பமாக இருந்து வருகிறது.

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post