ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ஆஸ்திரிய சிறுமிகள், தற்போது வீட்டுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து போராளி மணப்பெண்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுமிகள் சிரியா, துருக்கி செல்கிறார்கள்.
இந்நிலையில், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சபினா செலிமோவிக் (15), சம்ரா கெசினோவிக்(17) (Sabina, Selimovic and Samra) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி துருக்கி சென்றனர்.
தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும், அல்லாஹ்வுக்காக சேவை செய்து மரணமிக்க விரும்புவதாகவும் அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்த அந்த சிறுமிகளின் புகைப்படங்களை தீவிரவாதிகள் போஸ்டர்களில் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சபினா மற்றும் சம்ரா தங்கள் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு திரும்பி வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என்று ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் ஐஎஸ் தீவிரவாதி அமைப்பில் இருந்து தப்பித்து வரும் கடினமான விடயம் என்று ஆஸ்திரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரிய ஊடகங்களில் கூறியிருப்பதாவது, சபினா மற்றும் சம்ரா செசன்ய தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது கர்ப்பமாக இருக்கலாம், அவர்கள் தப்பித்து வந்தாலும் வெளிநாட்டு போரில் கலந்து கொள்ள சென்றவர்கள் நாடு திரும்ப ஆஸ்திரிய சட்டம் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னாவில் வளர்ந்த சபினா, சம்ரா போன்று சுமார் 130 ஆஸ்திரியர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.