இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட சஹார் யாகான், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜெயந்த தர்மதாஸவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, நீண்டகாலமாக பாகிஸ்தானில் நிலவி வந்த தீவிரவாத அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டு தற்போது பாகிஸ்தான் பாதுகாப்பான நாடாக உள்ளது என சஹார் யாகான் உறுதியளித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஏனைய அதிகாரிகளுக்கு முன்னரே தெரிவிக்கப்படாத நிலையில், இச்சந்திப்பு திடீரென நிகழ்ந்ததாகவும் டெல்லியிலிருந்து துபாய்க்கு செல்லும் வழியில் தன்னை சஹார் யாகான் சந்தித்து பேசியதாகவும் ஜெயந்த தர்மதாஸ குறிப்பிட்டுள்ளார்