அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்பட சிறிலங்காவும், இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. இந்தோனேசியா மற்றும் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இருந்து செல்லும் அகதிகள் பெரும்பாலும் இந்தோனேசியாவிற்கு சென்றே அவுஸ்திரேலிய மற்றும் கனடாவுக்கான தங்களின் திசையை தீர்மானிக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்துதற்காக அவுஸ்திரேலியா இந்தோனேசியாவுக்கும், சிறிலங்காவுக்கும் பாரிய நிதித் தொகையை வழங்கி இருக்கிறது.
இதன்அடிப்படையில் தொடர்ந்தும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்பட அவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அகதிகளைக் கட்டுப்படுத்த ஒன்றிணைத்து செயற்பட சிறிலங்காவும் இந்தோனேசியாவும் இணக்கம்!!
