ரஷ்யாவில் வசித்து வரும் எட்வர்ட் ஸ்னோடென் தனது காதலியுடன் இணைந்துள்ளார்.
அமெரிக்காவின் ரகசிய புலனாய்வுத்துறையின் கணனிப் பிரிவில் பணிபுரிந்த எட்வர்ட் ஸ்னோடென் அந்நாடு பிற நாடுகளை ரகசியமாகத் துப்பறிவதை வெளியுலகிற்குத் தெரிவித்ததன் மூலம் அந்நாட்டு அரசின் கோபத்திற்கு ஆளானார்.
தண்டனைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிய அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்துள்ளது.‘
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் அவரது காதலி லிண்டே மில்ஸ் தற்போது ரஷ்யாவிலுள்ள ஸ்னோடனுடன் இணைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அனடோலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ஸ்னோடனின் நீண்ட கால காதலியும், நடன நங்கையுமான லிண்ட்சே கடந்த யூலை மாதம் மாஸ்கோவில் சந்தித்து விட்டு நாடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ரஷ்யா சென்றுள்ளார்.
எப்பொழுதெல்லாம் லிண்ட்சே ரஷ்யா வருகிறாரோ அப்பொதெல்லாம் ஸ்னோடனுடன் தான் அவர் வசிப்பதாகவும், அது ஸ்னோடனை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விசா கட்டுப்பாடுகள் காரணமாக லிண்ட்சே ரஷ்யாவில் நிரந்தரமாக தங்க முடியாத நிலை ஏற்பட்டாலும், அடிக்கடி அவர் அங்கு வந்து செல்வதாகவும், இருவரும் இணைந்து ரஷ்யாவில் உள்ள திரையரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதாகவும் அனடோலி கூறியுள்ளார்.