பெருமளவு மக்கள் வந்து செல்லும் இடமான யாழ் நகரப் பகுதியில் தற்போது பாலியல்முறைகேட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா். குறிப்பாக யாழ் நகா்ப் பகுதிக்கு தனியார் கல்வி நிலையங்களில் கல்விகற்க என வரும் மாணவ, மாணவிகள் காதல் என்ற போர்வையில் பெரும் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருகின்றதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழ் கோட்டைப் பகுதியைச் சுற்றி சீனப் பெண்கள் அல்லது மலேசியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் சில பெண்கள் பகிரங்கமாகவே விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பலர் யாழ் கோட்டைப் பகுதிக்கும் நகா்புறங்களில் இருக்கும் சினிமா அரங்குகளிலும் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். பல ஏக்கா் விஸ்தீரனமான யாழ் கோட்டையின் உட்பகுதியின் மறைவான பகுதிகளில் இவா்கள் சில இடங்களில் நிர்வாணமாகக் கூட காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் கோட்டைப் பகுதி படையினரின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருந்தும் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் நடைபெற்று வருவது வருந்தத்தக்கது என சமூக ஆா்வலா் ஒருவா் தெரிவித்துள்ளார்கள்.
யாழ் கோட்டைப் பகுதிக்கு வரும் காதலா்கள் உண்மையான காதலா்களாக இல்லாமல் இருப்பதால், இவ்வாறான ஜோடிகளை படையினா் ஏன் அனுமதிக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.