
மிகச்சரியாக நேற்று பகல் 11.30 மணி அளவில் விசாகப்பட்டினம் அருகேயுள்ள புடிமட்கா என்ற இடத்தில் மிகவும் ஆவேசமாக தாக்கிய ஹூட் ஹூட் புயல் காரணமாக அங்கு கனமழை பெய்தது. அதோடு மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது.
கடுமையான புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்நதது. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள், செல்போன் கோபுரங்கள், விளம்பர பலகைகள் மேலும் கடைகளின் கூரைகள் ஆகியவை பலத்த சேதத்திற்கு ஆளாகின. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர, மற்றும் நான்கு சக்கர் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டது. மின்சார மற்று, தொலைபேசி சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதுவரை இந்த புயலுக்கு ஐந்து பேர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
புயல் சேதங்கள் குறித்து ஆராயவும், மீட்புப்பணிகளை கவனிக்கவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மீட்புப்பணிகளுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.