
இருப்பினும், இந்தப் புகைப்படத்தில் தென்படுவது மணல் மேடாகவோ அல்லது புகைப்படக் கையாழுகையாகவோ இருக்கக்கூடும் என சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பிடித்த குயின்டன் வின்டர் என்பவர், ஆரம்பத்தில் தானும் மணற்திட்டாக இருக்கக்கூடும் என நம்பியதாகவும் பின்னர் அது நீரிலிருந்து நகர்வதைக் கண்டபின்னரே அது நண்டு என்பதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, உலகின் மிகப்பெரிய நண்டாக ஜப்பானின் ஸ்பைடர் கிராப் (சிலந்தி நண்டு) எனும் 12 அடியுடைய நண்டினம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.