எபோலா நோய்க்கு இதுவரை 4,447 பேர் பலியாகியுள்ளதாகவும், வாரத்திற்கு 10 ஆயிரம் பேர் எபோலா தொற்றுக்கு நோய்க்கு ஆளாகின்றதாகவும் உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. ‘எபோலா' என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்கி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 8,914 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் சிலர் எபோலாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எபோலாவுக்கு இதுவரை 4,447 பேர் பலி, வாரத்திற்கு 10,000 பேர் பாதிக்கப்படுகின்றனர்! - உலக சுகாதார நிறுவனம் தகவல்
