
இன்று திங்கட்கிழமை பிற்பகல் சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை நோக்கி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டபைபினரைச் சேர்ந்தவர்கள் சென்றபோது காவல்துறையினரால் வழி மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக் காரர்கள் கலங்கரை விளக்கம் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரால் சுப்பிரமணியன் சுவாமின் வீடு தடைகள் போடப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியன் சாமிக்கு எதிரான கோசங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் கொழும்பாவியையும் எரித்துள்ளனர்.