வெளிநாட்டு காதலில் நடக்கும் அந்தரங்கம் அம்பலம் VIDEO
சுரேஸ், பிறீடா, ரகுநாதன், புனிதமலர், கௌதம் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் குறும்படம் மனசெல்லாம் உன் வசம்.கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்தையும் செய்து இயக்கி இருக்கிறார் கி. தீபன்.காதலித்து ஏமாந்து போன ஒரு இளைஞன். காதல் தோல்வி அடைந்ததால் அவன் வருதத்தில் கவிதைகளை எழுதுகிறான். எதிர்ப்பாராத விதமாக இந்த கவிதைகளை கவிதா என்ற பெண் படிக்க, உடனே அவள் அவன் மீது காதலில் விழுகிறான்.இதனை அப்பெண் அவனிடம் தெரிவிக்கும் போது அவன், நீயும் என்னை ஏமாற்றி விடமாட்டாயே. பெண்கள், ஆண்களுக்கு கொடுப்பது வலி மட்டும் தான். நானும் உன்னை காதலிக்கிறேன். ஆனால் நீ என்னை கைவிடமாட்டாயே என்று கூறுகிறான். அப்பெண் உன்னை கைவிட மாட்டேன் என்று நம்பிக்கை தெரிவித்ததும், இருவரும் காதலிக்கின்றனர். கடைசியில் அப்பெண் அவனை ஏமாற்றாமல் திருமணம் செய்கிறாளா? அல்லது அப்பெண்ணும் அவனை ஏமாற்றுகிறாளா என்பது தான் மீதி கதை.பெண்கள், ஆண்களை ஏமாற்றுபவர்கள் என்ற கருத்து இக்குறும்படத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் குறும்படம் முழுவதும் ஏதோ குறைவது போல் ஒரு உணர்வு.எடிட்டிங் கச்சிதம், பின்னணி இசை குறும்படத்திற்கு ஏற்றார் போல் இருந்தது.
