ஓஸ்ரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் துண்டிக்கப்பட்ட சிரிய இராணுவத்தினர் ஒருவரின் தலையை கையில் வைத்திருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அவரே இவ்வாறு தளது மகனின் வீர தீர செயல் தொடர்பாக புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்துள்ளார். ஓஸ்ரேலியாவில் வசித்து வந்த இவர் தனது சகோதரனின் கடவுச்சீட்டிலேயே நாட்டை விட்டு தப்பியதாக தற்போது கூறப்படுகின்றது. மேலும் இந்த புகைப்படத்தை அடையாளம் காட்டியவர் இச்சிறுவனின் உறவினர் என்பது இப்படம் தொடர்பான நம்பகத்தன்மையை பறை சாற்றுகின்றது. இச்சிறுவனின் உடையும் பாதணியும் சிறுவன் விடுமுறையை கொண்டாடுவது போன்றே உள்ளது. குறித்த ஒஸ்ரேலிய நபர் பிறிதொரு படத்தில் தனது 3 பிள்ளைகளுடனும் இராணுவ உரு மறைப்பு உடை தரித்து கைகளில் இயங்திர துப்பாக்கி தரித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஒஸ்ரேலியாவில் இந்த புனித போரா நடத்துபவர்கள் மிகவேகமாக கால் ஊன்றி விடுவார்கள் என்றும் ஒஸ்ரேலியாவுக்கு முன்னறிவித்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்த ஒஸ்ரேலிய பிரதமர் ரொனி அபட் இச்செயல் மிகவும் வெட்கப்படக்கூடிய செயல் என்று வர்ணித்துள்ளார்.