இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது . இந்த வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி . 28 வருடங்களுக்குப் பின் இந்தியா இப்போது தான் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . அந்த வாழ்த்துச் செய்தி பின்வருமாறு ,
நன்றாக விளையாடுனீர்கள் !! லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற இந்த வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் !! நாங்கள் உங்களுடைய அபார ஆட்டத்தினால் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைந்துள்ளோம் .
என்று வாழ்த்தியுள்ளார் .
இந்திய கிரிக்கெட் அணிக்கு மோடி பாராட்டு !!
