அரசு பதவிகளுக்கு சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என பல வேலை இல்லா பட்டதாரிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இவை முழுவதும் ஊழல் நிரம்பி உள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டு ஆகும். இப்போது அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மத்திய அரசின் ஒரு தேர்வில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சகங்களிலும், மத்திய அரசின் துறைகளிலும் பணியாளர்களை நியமிப்பதற்காக எழுத்து தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 92 வது கேள்வியாக நான்கு நடிகைகளின் பெயரை கொடுத்து இவர்களில் யார் உயரமானவர் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். இதெல்லாம் ஒரு கேள்வியாடா, இதற்கும் நாம் படிப்பதற்கும் என்னடா சம்மதம் என்று எண்ண தோன்றுகிறது.
இந்த கேள்விகளுக்கு மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த கேள்வியை மதிப்பீட்டில் எடுத்து கொள்ள கூடாது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த கோரிக்கைக்கு தேர்வு ஆணையம் சரி என்று கூறி உள்ளது, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியது.