Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » » உலக பெண்கள் உச்சி மாநாட்டில் பேச இருக்கும் இந்திய நடிகை !!
«
Next
Newer Post
»
Previous
Older Post

இன்று நடைபெற உள்ள முதல் பெண்கள் உச்சி மாநாட்டில் இந்திய நடிகை மற்றும் பிரபல மாடல் பிரீடா பின்டோ கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார் . இந்த மாநாட்டை பிரிட்டென் அரசு யுனிசெப் என்னும் அமைப்பின் உதவியுடன் நடத்த இருக்கிறது . உலகில் உள்ள அனைத்து பிரபல அதிகாரிகள் , அரசு , பிரபல பெண் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை ஒழிக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது . முக்கியமாக அதிகரித்து வரும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தும் செய்ல்களை நிறுத்தவும் , வயதுக்கு வரும் முன்னே திருமணம் செய்து வைக்கும் கொடுமையை நிறுத்தவும் இந்த மாநாட்டில் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும் .


இந்த மாநாட்டின் கடைசியை உரையை பிரீடா பின்டோ அளிக்க உள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் , " நான் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி பேச உள்ளேன் . மேலும் குழந்தைகள் திருமணத்தை தடுப்பது எவ்வாறு ஒரு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றும் என்றும் , அவர்களுக்கு கல்வி வழங்குதல் , அவர்களை வன்முறையில் இருந்து காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும் பேச உள்ளதாக " கூறினார் .

பிரீடா பின்டோ ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post