முதல்
முறையாக ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் உலக இளவரசி பட்டம் (Miss Princess Of
The World) என்ற பட்டதை வெல்லும் தருவாயில் உள்ளார். உலக அழகி போட்டிக்கு
அடுத்த படியாக வருடா வருடம் நடத்தப்படும் போட்டி உலக இளவரசி போட்டி. இந்த
வருடத்திற்கான போட்டியில் 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டிக் களத்தில்
உள்ளனர். இதில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா
ல்லயோட்சன்’ (Abissheka Lloydson) என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக
ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக
மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று
வருகின்றது. இதில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு
கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேகா ல்லயோட்சன். இவர் ஏற்கனவே இளம்
வயதினருக்கான மிஸ் கனடா பட்டதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பெண் உலக இளவரசி பட்டம் பெறும் முக்கிய கட்டத்தில்…
